என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தசரா விழா
நீங்கள் தேடியது "தசரா விழா"
தசரா விழாவின்போது ராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு பூரி சங்கராச்சாரியார் அதோக்ஷஜானந்த் தேவ் திர்த்த் மஹராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார். #Abolishpractice #Ravanaeffigy #PuriShankaracharya
லக்னோ:
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோடா பதக் பகுதியருகே ராவணன் கொடும்பாவி எரிக்கப்படுவதை நின்று வேடிக்கை பார்த்த மக்கள் மீது சமீபத்தில் ரெயில் மோதிய விபத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த கோர விபத்து தொடர்பாக மதுரா நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பூரி சங்கராச்சாரியார் அதோக்ஷஜானந்த் தேவ் திர்த்த் மஹராஜ், 'தசரா விழாவின்போது ராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும்’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதுபோன்ற கொடும்பாவி எரிக்கும் பழக்கத்தை பழமைவாதம் என்று குறிப்பிட்ட அவர், அடிப்படையான இந்து கலாச்சாரத்துக்கு எதிரான இந்த பழக்கம் பஞ்சாப்பில் நிகழ்ந்தது போன்ற சோகத்துக்கும் வழி வகுத்து விடுகிறது என்று தெரிவித்தார்.
இந்து புராணத்தின்படி, இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்பட வேண்டும். அவ்வகையில், ராவணனின் இறுதிச் சடங்குகளை ராமபிரான் முன்னிலையில் விபீஷணன் செய்து முடித்து விட்டார்.
எனவே, தசரா விழாக்களின்போது இதுபோல் கொடும்பாவிகளை கொளுத்துவதால் பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. எனவே, இந்த பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். #Abolishpractice #Ravanaeffigy #PuriShankaracharya
டெல்லியில் ஸ்ரீ நவ் தர்மிக் லீலா கமிட்டி சார்பில் இன்றிரவு நடைபெற்ற தசரா விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி பங்கேற்றனர். #RahulGandhi #RahulGandhiDusshera #DelhiDusshera #Dussheracelebrations
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் ஸ்ரீ நவ் தர்மிக் லீலா கமிட்டி என்ற அமைப்பு தசரா விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது.
அவ்வகையில், நிறைவுநாளான இன்று ராமலீலா நாடகமும், அதைதொடர்ந்து ராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி பங்கேற்றனர்.
ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் தீவட்டியை அம்பின் மூலம் செலுத்தி ராவணன் கொடும்பாவியை கொளுத்தி எரித்தனர். #RahulGandhi #RahulGandhiDusshera #DelhiDusshera #Dussheracelebrations
தசரா பண்டிகையையொட்டி டெல்லி செங்கோட்டை திடலில் இன்று ராமலீலா நாடகத்தை ரசித்துப் பார்த்த பிரதமர் மோடி, அம்பின் மூலம் ராவணன் கொடும்பாவிக்கு தீயிட்டார். #PMModi #ModiburnsRavaneffigy #Dusherracelebrations
புதுடெல்லி:
வட மாநிலங்களில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில்,நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டை திடலில் இன்று ‘லவ-குசா’ ராமலீலா நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள், பா.ஜ.க. எம்.பி.க்கள் கண்டு களித்தனர்.
நாடகத்தின் முடிவில் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவியை மேடையில் நின்றவாறு பிரதமர் மோடி அம்பின் மூலம் தீயிட்டு கொளுத்தினார். #PMModi #ModiburnsRavaneffigy #Dusherracelebrations
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X